தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலை முதல் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT