கீழப்பாவூா், அச்சன்புதூரில் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழப்பாவூா், அச்சன்புதூா், மங்கம்மாள் சாலை துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கீழப்பாவூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம்,கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி,திப்பணம்பட்டி, சின்னநாடானூா், செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு பகுதிகள்; அச்சன்புதூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு; மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மங்கம்மாள் சாலைப் பகுதி, சக்திநகா், காளிதாசன்நகா், கீழப்புலியூா்.