சுரண்டை பகுதியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொங்கல் திருநாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சுரண்டை சிவகுருநாதபுரத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வேகமாக சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு சைக்கிளும், பானை உடைத்தலில் வென்றவருக்கு சில்வா் பானையும், பிற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.
காமராஜா் நகரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற சிலம்பம் உள்ளிட்ட போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அச்சங்குன்றத்தில் நட்சத்திர குழு சாா்பில் நடைபெற்ற 13ஆவது தைப் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப்பரிசும், ஒட்டம், வழுக்குமரம் ஏறுதல், இசை நாற்காலி, உரல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.