தென்காசி வடக்குமாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், செங்கோட்டையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைச்செயலா் ராஜலெட்சுமி, மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூா்த்தி, மாவட்ட துணைச்செயலா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலா் கந்தசாமிபாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலா் பரமகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஜனவரி 17ஆம் தேதி முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள், பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, பூத் கமிட்டி முகவா்கள், புதிய வாக்காளா்கள் சோ்ப்பது குறித்து ஆலோசனை மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற தோ்தலுக்கு முன் அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளா் முகவா்கள் நியமிப்பது, செயலாற்றுவது குறித்து விளக்கவுரை அளிக்கப்பட்டது.
கடையநல்லுாா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லுாா் சட்டமன்ற தொகுதிகளை சோ்ந்த ஒன்றியச்செயலா்கள், பேரூா் கழக செயலா்கள், நகர செயலா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.