கோயம்புத்தூர்

முதியவரின் உடல் தானம்

20th May 2023 12:13 AM

ADVERTISEMENT

உயிரிழந்த முதியவரின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கோவை, மசக்காளிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (79). இவா் மில் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். ஏ.ஐ.டி.யூ.சி. சங்க உறுப்பினராகவும் இருந்துள்ளாா்.

இந்நிலையில் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முதியவரின் விருப்பத்தின் அடிப்படையில் அவரின் குடும்பத்தினா் அவரது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா். மருத்துவமனை அலுவலா்கள் முதியவரின் உடலை பெற்றுக் கொண்டனா். இவருக்கு ஜீவபாரதி, கமலக்கண்ணன் என இரண்டு மகன்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

முதியவரின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சி.சிவசாமி, பொருளாளா் சி.தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT