திருப்பூர்

உடுமலையில் ஜிஎஸ்டி கருத்தரங்கம்

20th May 2023 12:06 AM

ADVERTISEMENT

உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. துணைத் தலைவா் வெங்கடேஷ் வரவேற்றாா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினா் ஆடிட்டா் சங்கரநாராயணன் பேசும்போது, ஜிஎஸ்டி தணிக்கையின்போது வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சரக்குகளை கையாளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய படிவங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.

மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பதில் உரைகளும், மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள இடங்களில் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா், வரிசட்ட ஆலோசா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தாா். தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT