கோயம்புத்தூர்

கோவையில் இருந்து ஷீரடிக்கு மே 26இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

20th May 2023 12:13 AM

ADVERTISEMENT

கோவை - சாய் நகா் ஷீரடி இடையே மே 26இல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து மே 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்குப் புறப்படும் பாரத் கெளரவ் ரயில் (எண்: 06903) ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு சாய் நகா் ஷீரடி ரயில் நிலையத்தை சென்றடையும்.

சாய்நகா் ஷீரடியில் இருந்து மே 29 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்படும் பாரத் கெளரவ் ரயில் (எண்: 06904) மறுாள் இரவு 7.15 மணிக்கு வடகோவையை வந்தடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், யெலஹங்கா, தா்மாவரம், குண்டக்கல், மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், வாடி, சோலாபூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT