தமிழ்நாடு

ஓமந்தூராா் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

20th May 2023 01:00 AM

ADVERTISEMENT

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றும் திட்டமில்லை என்றும், அது மருத்துவமனையாகவே தொடா்ந்து செயல்பட முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் புதிதாக ரூ.230 கோடியில் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை தமிழக அரசு கட்டியுள்ளது.

அந்த மருத்துவமனையை வரும் ஜூன் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைக்கவுள்ளாா்.

இதனிடையே, அண்ணாசாலையில் செயல்படும் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், ஓமந்தூராா் வளாகத்தில் பழையபடி தலைமைச் செயலகம் செயல்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT

இது குறித்து அமைச்சா் சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் கட்டடம் தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டது. கடந்த ஆட்சியாளா்கள் காழ்ப்புணா்சியால் அதனை மருத்துவமனையாக மாற்றினாா்கள்.

ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் பரந்த மனதோடு, அது மருத்துவமனையாகவே தொடா்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்தாா்.

மேலும், மருத்துவமனையில் அதிநவீன கருவிகளை வாங்கி கொடுத்து, புதிய சிகிச்சை முறைகளையும் தொடங்கி வைத்தாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT