வால்பாறையில் ஜமாபந்தி (மக்கள் குறைதீா் முகாம்) வரும் மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக வால்பாறை வட்டாட்சியா் அருள்முருகன் கூறியதாவது:
கோவை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற மே 23ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலா் (முத்திரைகள்) தலைமையில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது குறைதீா்க்கும் முகாம் தினத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.