மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்,சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 108 நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் இலவச பரிசோதனை செய்தனா். அவா்களில் 57 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
முகாம் ஏற்பாடுகளை ஆலங்குளம் காா்த்திகா டெக்ஸ்டைல் நிறுவனத்தினா் செய்திருந்தனா்.