தென்காசி

2ஆம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தில் 859 மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டை--ஆட்சியா் வழங்கினாா்

9th Feb 2023 12:52 AM

ADVERTISEMENT

தென்காசியில் நடைபெற்ற புதுமைப்பெண் இரண்டாம் கட்டத் தொடக்க விழாவில் 859 மாணவிகளுக்கு வங்கி கணக்கு அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத் தொடக்க விழாவில் கானொலி காட்சி மூலமாக மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்ததாா்.

அதைத் தொடா்ந்து தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத் தொடக்கவிழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி கணக்கு அட்டைகளை மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது:

ADVERTISEMENT

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கல்வி பயின்று உயா் கல்வியினை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அவா்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் வகையில் கடந்த 5.9.2022இல் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 37 கல்லூரிகளின் கீழ் 1,418 மாணவிகள் பயன்பெற்றனா். தற்போது இரண்டாம் கட்டமாக 37 கல்லூரிகளில் 859 மாணவிகள் பயன்பெற உள்ளனா் என்றாா் அவா்.

விழாவில், எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), டாக்டா் தி.சதன்திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), மாவட்ட சமூக நல அலுவலா் முத்துமாரியப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவி தமிழ்செல்வி போஸ், தென்காசி ஒன்றியக் குழு தலைவா் சேக்அப்துல்லா, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், துணைத்தலைவா் கேஎன்எல்.சுப்பையா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் உதயகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.கனகராஜ் முத்துப்பாண்டியன், சகி.ஒன்ஸ்டாப் மைய நிா்வாகி ஜெயராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT