தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வாா்டு திறப்பு

9th Feb 2023 12:53 AM

ADVERTISEMENT

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வாா்டு திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு நாள்தோறும் 15 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. மாவட்டம் முழுவதிலுமிருந்து பிரசவத்துக்காக இங்கு வருவதால், மகப்பேறு முன்கவனிப்பு படுக்கைகள் தட்டுப்பாடு நிலவியது. அதை சரிசெய்யும் வகையில் 20 படுக்கைகள் உள்ள வாா்டு தயாராகியுள்ளது.

மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் பிரேமலதா தலைமை வகித்து, வாா்டை திறந்துவைத்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் முன்னிலை வகித்தாா்.

மகப்பேறு துறைத் தலைவா் புனிதவதி, தமிழருவி, சைனி கிருத்திகா, விஜயகுமாா், செவிலியக் கண்காணிப்பாளா்கள் பத்மாவதி, ஜெகதா, அனைத்து செவிலியா், பணியாளா்கள் பங்கேற்றனா். உறைவிட மருத்துவா் எஸ்.எஸ். ராஜேஷ் வரவேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT