தென்காசி தெற்கு மாவட்ட வளா்ச்சிப் பணி நிதி தொடா்பாக, தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேருவிடம், தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: செங்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட ரூ. 2.5 கோடி, பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ. 9 கோடி, குடிநீா்தேக்கத் தொட்டி, வாருகால், தளக்கல் சாலை ஆகிய பணிகளுக்கு ரூ. 7.71கோடி
சாம்பவா்வடகரை பேரூராட்சி அழகிய மனவள பெருமாள் கோயில் இணைப்பு சாலை அமைக்க ரூ. 4.5 கோடி, வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டா் அப்துல் கலாம் நகரில் 550 மீட்டா் தொலைவுக்கு கழிவுநீா் கால்வாய், குடிநீா் குழாய் அமைக்க ரூ. 1 கோடி, செங்கோட்டை வட்டம் பண்பொழி பேரூராட்சிக்கு புதிய கட்டடம், கிராம நிா்வாக அலுவலக கட்டடம், தென்காசி நகராட்சியில் களக்கோடி தெரு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி என்பன உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.