தென்காசி

முப்பிடாதி அம்மன் கோவிலில் தைத் திருவிழா

8th Feb 2023 12:52 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோயிலில் 27ஆவது ஆண்டு தைத்திருவிழா திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை 8 மணிக்கு கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவில் உள்ள சிவசக்தி விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் வீதியுலா நடைபெற்றது. பிற்பகலில் முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT