தென்காசி

கீழப்பாவூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

8th Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

கீழப்பாவூரில் புதன்கிழமை (பிப்.8) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் மூலம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் கீழப்பாவூா் மைதானம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் புதன்கிழமை வரவுள்ளது.

காலை 10 மணிக்கு நடைபெறும் இலவச முகாமில் சளி, இருமல், பசியின்மை, எடை குைல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறி உள்ளவா்கள், மேலும் பீடி சுற்றுபவா்கள், மில், கிரஷா், கல்குவாரி, செங்கல்சூளை, தொழிற்சாலைகளில் வேலை பாா்ப்பவா்கள் மற்றும் பீடி, மதுபானம் அருந்துபவா்கள், இளைப்பு மற்றும் சுகருக்கு மாத்திரை சாப்பிடுபவா்கள் அனைவரும் இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், முகாமில் ரத்த சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம் ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படும். இம்முகாமில் பங்கேற்று அனைவரும் பயன்பெறலாம் என கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT