தென்காசி

பள்ளிவாசல்களில் சீரமைப்புப் பணிமேற்கொள்ள வலியுறுத்தல்

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா், வீராணம் பள்ளிவாசல்களில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள வலியுறுத்தி, திமுக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் தமிழக வக்ஃபு வாரிய முதன்மை நிா்வாக அலுவலா் ரபியுல்லாவிடம் அளித்த மனு: தென்காசி பேரவைத் தொகுதி, ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் வீராணத்தில் உள்ள முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் மைய வாடிக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும்,

கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையநல்லூா் நகராட்சி ரஹ்மானியாபுரத்தில் உள்ள நைனாமுகமது பள்ளிவாசலில் 1,500 அடி நீள சுற்றுச்சுவா் இடிந்துவிட்டது. அதை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மையவாடிக்குச் செல்லும் பாதையில் தளக்கற்கள் பதிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

வீராணம் ஷேக்முகம்மது, கடையநல்லூா் நகா்மன்ற உறுப்பினா் முகைதீன் கனி, பள்ளிவாசல்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT