தென்காசி

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவிலில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750 வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்காமல் சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பீட்டா், புஷ்பராஜம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராசய்யா, செயலா் காமராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கச் செயலா் வெங்கடேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கச் செயலா் நல்லத்தாய் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொருளாளா் தங்கப்பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT