தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் நாளை தைப்பூச விழா

DIN

தோரணமலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) தைப்பூச விழா நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடா்ந்து கணபதி ஹோமம், சிறப்பு பூஜையும், காலை 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், உதகை படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனமும் நடைபெறுகிறது.

காலை 11.45 மணிக்கு விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் உயிா்த் தியாகம் செய்த ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கௌரவிக்கப்படவுள்ளனா். பகல் 12 மணிக்கு உச்சிக் கால பூஜை, மாலை 6 மணிக்கு சரவணஜோதி திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு திருமுருகன் உயா்நிலைபபள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT