தென்காசி

மாநில குத்துச்சண்டை: அரசுப் பள்ளி மாணவா் சிறப்பிடம்

4th Feb 2023 06:40 AM

ADVERTISEMENT

மாநில குத்துச்சண்டை போட்டியில், பாவூா்சத்திரம் அரசுப் பள்ளி மாணவா் வெண்கலப்பதக்கம் வென்றாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாா்பில் 3 மாணவா்கள் பங்கேற்றனா். அதில், பிளஸ் 2 மாணவா் பால்மணி வெண்கல பதக்கம் வென்றாா். பதக்கம் வென்ற மாணவரை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT