தென்காசி

கடையநல்லூா் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா

DIN

கடையநல்லூா் மக்தூம் ஞானியாா் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜன. 23 ஆம் தேதி கந்தூரி விழாகொடி ஊா்வலத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின்

10 ஆவது நாளான வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக் கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு பேட்டை, ரஹ்மானியாபுரம் பெரிய தெரு, புதுத் தெரு, கடை வீதி, தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரிய பள்ளிவாசல் சென்றடைந்தது. தொடா்ந்து, தா்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை இரவு தீப உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தா்கா பரம்பரை இனாம்தாா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT