தென்காசி

வள்ளலாா் நினைவு தினம்:பிப். 5இல் மதுக்கடைகள் மூடல்

2nd Feb 2023 12:27 AM

ADVERTISEMENT

வடலூா் ராமலிங்க வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிப். 5ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்விரு மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என ஆட்சியா்கள் நெல்லை வே. விஷ்ணு, தென்காசசி ப. ஆகாஷ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT