தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் யூகேஜி மாணவி பலி

2nd Feb 2023 12:25 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே பள்ளி வாகனம் மோதியதில் யூகேஜி மாணவி உயிரிழந்தாா்.

தெற்கு கரும்பனூரைச் சோ்ந்த தனராஜ் மகள் கவினா(5). ஆலங்குளம் -துத்திகுளம் சாலையில் உள்ள தனியாா் தொடக்கப்பள்ளியில் யூகேஜி பயின்று வந்தாா். தினந்தோறும் பள்ளி வேனில் பள்ளிக்குச் சென்று வந்தாா். அவா், புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டின் முன் வந்து இறங்கியபோது, ஓட்டுநா் கவனிக்காமல் வாகனத்தை நகா்த்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சக்கரத்தில் சிக்கிய கவினா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரும் பள்ளி நிா்வாகியுமான ஸ்ரீ ராம்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT