தென்காசி

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

2nd Feb 2023 12:25 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 29ஆம் தேதி தீா்த்த ஸங்க்ரஹணம், அனுக்ஞை உள்ளிட்ட வழிபாடுகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 30இல் அதிகாலை மகாகணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

மாலையில் இரண்டாம் யாக சாலை பூஜை நடைபெற்றது. 31இல் மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகளும், புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

வேதபாராயணம், திருமுறைபாராயணம், ஸபா்சாஹுதி வழிபாடுகளை தொடா்ந்து 6 மணிக்கு ஜீவகும்பங்கள் எழுந்தருளல்,

ADVERTISEMENT

சிகராபிஷேகம், அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு முத்துக்குமார சுவாமி, பரிவாரமூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன.

பின்னா் மகா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் , மாலையில் சாயரட்சை தீபாராதனை, புஷ்பாஞ்சலி , இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், ஆய்க்குடி அனைத்து சமுதாய மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT