ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் 3ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் தனது வாா்டு மக்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
3வது வாா்டு உறுப்பினா் ஆரோக்கிய மேரி, தனது வாா்டில் நடைபெறும் பேவா் பிளாக் கல் பதிக்கும் பணியில் சுணக்கம் உள்ளதாகக் கூறி, பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தாராம். எனினும், பணியில் சுணக்கம் உள்ளதாம்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி அவரது தலைமையில் வாா்டு மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குளம் போலீஸாா் வந்து, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.