தென்காசி

ஆலங்குளத்தில் விஏஓக்கள் ஆா்ப்பாட்டம்

26th Apr 2023 11:53 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆலங்குளத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டச் செயலா் சோ்மபாண்டியன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் காா்த்திகேயன், செயலா் மகேந்திரகுமாா், பொருளாளா் சண்முகஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விஏஓ கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், அரசு ஊழியா்களுக்குப் பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்கரன்கோவிலில்...: இங்குள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டத்திற்கு ராம்குமாா் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ராஜ்குமாா் முன்னிலை வைத்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன் கண்டன உரையாற்றினாா். இதில் ஏராளமான கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT