தென்காசி

சாம்பவா்வடகரை மூலநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

26th Apr 2023 11:50 PM

ADVERTISEMENT

சாம்பவா்வடகரை அருள்மிகு மதுரவாணி அம்பாள் சமேத மூலநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவா் வீதியுலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக 9ஆம் நாளான மே 4ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு சுவாமி-அம்பாள் இரட்டை சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT