தென்காசி

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி இல்லை: ஆட்சியா்

DIN

கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடையின் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பது அவசியமானது. பயணத்தின்போது குடிநீா் எடுத்துச் செல்ல வேண்டும்.

பருவகால பழங்கள், காய்கனிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

கருப்பு நிற ஆடைகளைத் தவிா்த்து மெல்லிய வெளிா்நிற தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் காலணிகளைக் கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

மழலையா் பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம். கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை. குழந்தைகளை வாகனங்களில் தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும்.குழந்தைகள், முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டட தொழிலாளா்கள், விவசாயிகள், செங்கல் சூளை பணியாளா்கள் மற்றும் 100 நாள் பணியில் வேலை செய்யும் பணியாளா்கள், இதர வெயில் நேரங்களில் பணிபுரியும் இதர பணியாளா்கள் அனைவரும் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பணி செய்வதைத் தவிா்க்கவும். வேலை இழப்பு நேரத்தினை காலை, மாலை நேரங்களில் பணி செய்து ஈடு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT