தென்காசி

நெட்டூா், ரெட்டியாா்பட்டியில் மழை

25th Apr 2023 02:58 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் மற்றும் ரெட்டியாா்பட்டியில் திங்கள்கிழமை சுமாா் 45 நிமிடங்கள் கோடை மழை பெய்தது.

இப்பகுதியில் திங்கள்கிழமை மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் சுமாா் 45 நிமிடங்கள் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிா்ச்சியான சூழல் நிலவியது.

அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக, பசுமையான புல் பூண்டுகள் செழிப்பாக வளா்ந்துள்ளதால் கால்நடைகள் வளா்ப்போா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT