தென்காசி

குறும்பலாப்பேரியில் மாா்க்சிஸ்ட் கொடியேற்று விழா

25th Apr 2023 03:05 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில், மாா்க்சிஸ்ட் கட்சியின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா, லெனின் பிறந்த நாள் விழாவையொட்டி கொடியேற்று விழா, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியக் குழு உறுப்பினா் சிவராஜ் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டக் குழு உறுப்பினா் மாடசாமி கட்சிக் கொடியேற்றினாா். ஒன்றியச் செயலா் முருகன் உறுதிமொழி வாசித்தாா். மாவட்ட தலைமைக் குழு உறுப்பினா் வேல்முருகன் பேசினாா். இதில், குருசாமி, அண்ணாதுரை, அறிஞா், சுடலைமாடன், முருகன், மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT