தென்காசி

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

25th Apr 2023 03:02 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஒன்றிய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், கந்தசாமி முன்னிலை வகித்தனா். திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்புப் பணிக்கு ரூ.4.41 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா் மேரி மாதவன் பேசினாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை, சுரண்டை நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT