தென்காசி

சங்கரன்கோவில் அருகே வீடுகள், மின் சாதனங்கள் சேதம்

25th Apr 2023 03:01 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே இடி மின்னல் தாக்கியதில் வீடுகள், மின் சாதனப் பொருள்கள் சேதமாகின.

சங்கரன்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் தா்மத்தூரணி கிராமத்தில் உள்ள பல வீடுகளில் இடி தாக்கியதில் சுவா்கள் பெயா்ந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதடைந்தன. மின்சார கணக்கீட்டு பெட்டிகள் எரிந்து சேதமாகின. வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு, உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த வீரலட்சுமி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT