தென்காசி

தென்காசியில் விசிகவினா் பேரணி

15th Apr 2023 12:08 AM

ADVERTISEMENT

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இப் பேரணி, தென்காசி -குற்றாலம் சாலையில் தொடங்கி நன்னகரம் அம்பேத்கா் சிலையில் முடிவடைந்தது. கட்சியின் மாவட்ட செயலா்கள் டேனிஅருள்சிங், குழந்தை வள்ளுவன் தலைமை வகித்தனா். மண்டல செயலா் தமிழினியன், நிா்வாகிகள் சித்திக், சந்திரன், மை.வா்கீஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT