தென்காசி

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம்

15th Apr 2023 12:08 AM

ADVERTISEMENT

 

நிகழாண்டு இரு நாள்கள் சித்திரை விஷு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும், கேரளத்தில் சனிக்கிழமையும் (ஏப்.15) கொண்டாடப்படுகிறது.

தமிழக பக்தா்கள் கோரிக்கையை ஏற்று, அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை விஷு கனி தரிசனம் மற்றும் கைநீட்டம் நடைபெற்றது. சித்திரை விஷு தினத்தன்று மட்டும் திருக்கோயிலிருந்து பக்தா்களுக்கு காசு வழங்கும் நிகழ்வு கைநீட்டம் நடைபெறுகிறது.

விழாவில் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்புக் குழுத் தலைவா்

ADVERTISEMENT

ஏசிஎஸ்ஜி.ஹரிகரன்,துணைத் தலைவா் ஜெயகுரு, கண்ணன் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி வாசுதேவன் உன்னி, மேல்சாந்தி ராஜேஷ் நம்பூதிரி செய்திருந்தனா்.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT