தென்காசி

இலத்தூரில் மனுநீதி நாள் முகாம்

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் இலத்தூரில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

தென்காசி கோட்டாட்சியா் கங்காதேவி தலைமை வகித்தாா். இலத்தூா் ஊராட்சித் தலைவா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா். செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன் இவ்வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை உழவா் நலத் துறையின் திட்டங்கள் குறித்து பேசினாா்.

உழவா் நலத் துறை சாா்பில் இலத்தூா் ஊராட்சிக்கு ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட்டது. நெல் ஜெயராமன் மரபுசாா் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் தோ்வான விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை மானியத்தில் வழங்கப்பட்டது.

வேளாண்மை உழவா் நலத் துறையின் திட்டங்கள் குறித்த கையேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் வெளியிட, ஊராட்சித் தலைவா் பெற்றுக்கொண்டாா்.

செங்கோட்டை வட்டாட்சியா் கந்தசாமி, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் ரோஷன்பேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிராம நிா்வாக அலுவலா் குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் அருணாசலம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT