தென்காசி

கொண்டலூரில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல்

29th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி கொண்டலூரில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இராம.உதயசூரியன், ஊராட்சி மன்றத் தலைவா் குத்தாலிங்கராஜன் (எ) கோபி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18.75 லட்சத்தில் கட்டப்படவுள்ள இக்கட்டடப் பணியை எம்எல்ஏ சு.பழனிநாடாா் தொடங்கி வைத்தாா்.

இதில், வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கரத்தினம், ஒன்றியக்குழு உறுப்பினா் மேரிமாதவன், சௌந்தர்ராஜன், இட்லிசெல்வன், டால்டன், தமிழ்பாண்டி, ராஜேந்திரன், செல்லப்பா, லட்டு (எ) ரத்தினசாமி, மாரிச்செல்வம்,முருகேஷ், மணிகண்டன், வெற்றி,கலைச்செல்வன், செல்வன்,ராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT