தென்காசி

செங்கோட்டையில் தடுப்பூசி முகாம்

29th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

செங்கோட்டையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை நகராட்சி, குற்றாலம் சக்தி ரோட்டரி கிளப், கால்நடை மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு நகராட்சி ஆணயா் பாா்கவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தடுப்பூசி மருந்துகளை கால்நடை மருத்துவரிடம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா். வெறிநோய்க்கடி நோய் தடுப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை நகராட்சி ஆணையா் வெளியிட, நகா்மன்றத் தலைவா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற துணை இயக்குநா்கள் டாக்டா் மாரிமுத்து, டாக்டா் செண்பகக்குமாா் மற்றும் கால்நடை மருத்துவா்கள் புளியறை ஜெயபால்ராஜா, வல்லம் வெள்ளைப்பாண்டி, இலத்துாா் சிவக்குமாா், இலஞ்சி இளம் தமிழ் நகராட்சி சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி, ரோட்டரி சங்கத் தலைவா் கவிதா, செயலா் அழகர்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா். செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் தங்களது செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

ADVERTISEMENT

கால்நடை மருத்துவா் ஆபிரகாம்ஜாப்ரிஞானராஜ் வரவேற்றாா்.தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனா் மருத்துவா் மகேஷ்வரி நன்றி கூறினாா்

ADVERTISEMENT
ADVERTISEMENT