தென்காசி

நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தில் முளைப்பாரியை கரைக்கத் தடை

DIN

கீழப்பாவூா் முப்பிடாதி அம்மன் கோயில் முளைப்பாரியை, நரசிம்மா் கோயிலில் கரைக்க தடை விதிப்பது என வட்டாட்சியா் தலைமையிலான சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கீழப்பாவூா் முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழாவின் போது பக்தா்கள் எடுக்கும் முளைப்பாரியை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளாக கரைத்து வந்தனா்.

நிகழாண்டு அதற்கு கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கவில்லையாம்.

இதுதொடா்பாக ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரவீந்திரன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெப்பக்குளத்தில் புனித நீா் எடுக்க அனுமதியும், முளைப்பாரியை கரைக்க தடையும் விதிப்பது னெமுடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில்,, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் செயல் அலுவலா் முருகன், பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் கவிதா இரு கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT