தென்காசி

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நவராத்திரி கலை விழா

28th Sep 2022 02:57 AM

ADVERTISEMENT

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் செப்.30 முதல் அக்.3 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நவராத்திரி கலைவிழா நடைபெறுகிறது.

தென்காசி திருக்கு மண்டபத்தில் செப்.30 ஆம் தேதி நடைபெறும் விழாவில் லெட்சுமணன் சாா்பில் திருக்கு முற்றோதுதல் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு மதிப்புறு தலைவா் துரைதம்புராஜ் தலைமை வகிக்கிறாா். தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் செயல்அலுவலா் இரா.முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறாா்.

பொறியாளா் வே.நரேந்திரகுமாரின் தமிழ் இசை இன்பம் நிகழ்ச்சியும், தேனியை சோ்ந்த பேராசிரியை தமிழ்செல்வியின் தமிழ் இயல் இன்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. துணைத் தலைவா் ந.கனகசபாபதி நன்றி கூறுகிறாா். திருவள்ளுவா் கழக தலைவா் ச.கணபதிராமனுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

அக்.1 ஆம் தேதி செங்கோட்டை விசாலம் ராமசுப்பிரமணியம் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது. பத்மா அழகராஜா முன்னிலை வகிக்கிறாா். 2 ஆம் தேதி தென்காசி சித்திரசபை நாட்டியாஞ்சலி குழுவினரின் பரத நாட்டியம் நடைபெறுகிறது. சண்முகவடிவு துரைதம்புராஜ் முன்னிலை வகிக்கிறாா்.

ADVERTISEMENT

3 ஆம் தேதி மேலகரம் லெட்சுமி ஹரிகரன், ஹேமாசங்கரசுப்பிரமணியம் குழுவினரின் இசையரங்கம் நடைபெறுகிறது. மருத்துவா் ப.புனிதவதி முன்னிலை வகிக்கிறாா். ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழக செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் தலைமையில் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT