தென்காசி

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

28th Sep 2022 02:54 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா தசரா ஊா்வலத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கும் பக்தா்களுக்கு காப்பு கட்டுதலும், பால்குடம் எடுத்தலும், அதைத் தொடா்ந்து பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற்றனது. இதில், விரதம் இருந்த 100 க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்கினி குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா, சாம பூஜை ஆகியவை நடைபெற்றன. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய ஊழியா்கள், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். புதன்கிழமை சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு, அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை நிா்வாகப் பொறுப்பாளா் எஸ்.எஸ். ராமசுப்பு, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT