தென்காசி

அருணாப்பேரியில் இலவச மருத்துவ முகாம்

28th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி அருணாப்பேரியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேகமாக பரவி வரும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற இம்முகாமில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் இனியன் தலைமையில் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இதில் சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன், உதவியாளா்கள் கலா, மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT