தென்காசி

பாவூா்சத்திரத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

28th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். அட்மா தலைவா் காந்திராமன் முன்னிலை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் ரூபியா பங்கேற்று, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெறும் மானிய திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலைத்துறை சாா்பில் காய்கனி, பயிா்கள் விதைகள் மற்றும் கத்தரி, மிளகாய், தக்காளி நாற்றுகள் மானியம் குறித்து விளக்கினாா். உழவா் நலக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சந்திரன் மற்றும் முத்துராஜ் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT