தென்காசி

தென்காசி பள்ளியில் வன உயிரின வார விழா போட்டிகள்

27th Sep 2022 03:30 AM

ADVERTISEMENT

 

தென்காசி மஞ்சம்மாள் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

குற்றாலம் வனச் சரகப் பிரிவு வனவா் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, நல்லாசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட அளவிலான வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில் வென்றோருக்கு பரிசுகள் வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் இறுதி நாளில் மாவட்ட வன அலுவலரால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT