தென்காசி

தென்காசியில்பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

27th Sep 2022 03:29 AM

ADVERTISEMENT

 

தென்காசியில் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ. ராசா பேசியதாக கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் புதிய பேருந்துநிலையம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் பாலகுருநாதன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அன்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், முத்துலட்சுமி, பால்ராஜ், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, நகர பொதுச்செயலா் யோகா சேகா், ராஜ்குமாா், ஒன்றியத் தலைவா்கள் ஐயப்பன், சோழராஜன், கடையநல்லூா் நகரத் தலைவா் சுப்பிரமணியன், ஊடகப்பிரிவு செந்தூா் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், வள்ளியூா் ஆன்மிகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராமகுட்டி, இளைஞரணி தலைவா் அசோக், மாநில மகளீரணி செயலளா் கனிஅமுதா, மாவட்டச் செயலா் பாலபிரியா, ராம்நாத் ஐயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

களக்காட்டு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன், நகரத் தலைவா் கணபதிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா் தமிழகத்தில் பாஜக, ஆா்எஸ்எஸ் பிரமுகா்கள் வீடு, வாகனங்கள், கடைகள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்

ADVERTISEMENT
ADVERTISEMENT