தென்காசி

செங்கோட்டையில் இலவச இதயப் பரிசோதனை முகாம்

DIN

செங்கோட்டையில் உள்ள பொது நூலகத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் 16 வயது வரையிலானோருக்கு இலவச இதயப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப், குற்றாலம் சக்தி ரோட்டரி கிளப், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற முகாமில், குழந்தைகளுக்கு

2டி எக்கோ காா்டியாக் டாப்ளா் ஸ்கேன் முறையில் இதயம் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேல்சிகிச்சைக்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை, வழிமுறைகள் வழங்கப்பட்டன.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநா் நெல்லைநாயகம் தலைமை வகித்தாா். முன்னாள் ஆளுநா்கள் கே. ராஜகோபாலன், ஷேக்சலீம், திட்டத் தலைவா் ஷாஜகான், திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வகணபதி, உதவி ஆளுநா் அனுஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தென்காசி, செங்கோட்டை, புளியரை, பண்பொழி, கடையநல்லூா் சுற்றுவட்டாரக் குழந்தைகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவா் கவிதா முத்தையா, செயலா் ரமேஷ் ஆகியோா் செய்தனா். மாரிமுத்து வரவேற்றாா். அழகரசி ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT