தென்காசி

ஆலங்குளம் முத்தாரம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் 1,503 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழாவையொட்டி, கோயிலில் இருந்து தசரா ஊா்வலத்தை கோயில் நிா்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்து வெள்ளிக்கிழமைதொடங்கி வைத்தாா். பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் வீதி உலா வந்தனா். சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1503 பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். திங்கள்கிழமை(செப்.26) காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவையும் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கும் பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், சுவாமிகள் பூக்குழி இறங்குதலும் நடைபெறுகிறது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, அன்னதானத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை நிா்வாகப் பொறுப்பாளா் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT