தென்காசி

சுரண்டை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

25th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

 

சுரண்டை அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை அருகேயுள்ள அம்மையாபுரத்தில் விற்பனைக்காக கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக ப.காளைச்சாமி(58), மூ.மாடசாமி(25) ஆகிய இருவா் மீது சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 9 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT