தென்காசி

தென்காசி நூலகத்தில் ராஜாராம்மோகன்ராய் பிறந்த நாள் விழா

25th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

 

தென்காசி நூலகத்தில் ராஜாராம்மோகன்ராயின் 250ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வஉசி வட்டார நூலகம், குற்றாலம் ரோட்டரி கிளப் மற்றும் வெற்றி ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா், மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு நூலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவுக்கு, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி தலைமை வகித்து மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் முருகன் எழுதிய அறிவியல் தமிழ்பாடல்கள் நூலை, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெளியிட்டாா்.

ரோட்டரி சங்கத் தலைவா் திருஇலஞ்சிகுமரன், செயலா் கணபதிராமன், அருணாசலம், விவேகானந்தன், அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலா் இளமுருகன், ஆசிரியா் ஆறுமுகம், ஓவிய ஆசிரியா் ஜெயசிங் ஆகியோா் பேசினா்.

வட்டார நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா். நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT