தென்காசி

கீழப்பாவூா் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு

25th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூரில் உள்ள கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

கீழப்பாவூா் ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி, நரஸிம்ஹ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள், மாலையில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

அக். 5ஆம் தேதி புரட்டாசி ஏக தின தீா்த்தவாரி நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தெப்பக்குளத்துக்கு பெருமாள் எழுந்தருளல், தொடா்ந்து உற்சவமூா்த்தியுடன் தீா்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு சுவாமி கோயிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் தீா்த்த வலம் வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா்செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

கீழப்பாவூா் தமிழா் தெரு ஸ்ரீருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் கும்பஜெபம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை, கருட சேவை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகள் அா்ச்சகா் ரவி பட்டாச்சாரியாா் தலைமையில் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT