தென்காசி

வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்தடை

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வாசுதேவநல்லூா் வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாரணபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப் பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழபுதூா், நெல்கட்டும்செவல், சுப்பிர மணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT