தென்காசி

சுரண்டையில் செப். 25இல் இலவச கண் பரிசோதனை

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில், நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் இலவச கண் பரிசோதனை செய்கின்றனா். கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோா் அன்றைய தினமே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், முகாமில் பங்கேற்கும் கண் நோயாளிகளுக்கு சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் சுரண்டை கிளை மேலாளா் கே.மகாராஜன் செய்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT